ஹைலைட்ஸ்:

  • அனுதீப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி சம்பளம்
  • ரூ. 25 கோடி கிளப்பில் சேர்ந்த சிவகார்த்திகேயன்
  • டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார்.

இந்நிலையில் ஜதி ரத்னாலு சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. அனுதீப் சொன்ன கதை பிடித்துப் போகவே, நம்ம கண்டிப்பாக இந்த படம் பண்றோம் என்றாராம் சிவகார்த்திகேயன்.

அனுதீப் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். அவர் ஒரு படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் வாங்குவது இதுவே முதல்முறை ஆகும். சிவகார்த்திகேயன் ரூ. 25 கோடி கிளப்பில் சேர்வது குறித்து அறிந்த ரசிகர்கள் அது பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதும், தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதும் அதிகரித்து வருகிறது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ராம் சரணை இயக்குகிறார். தெலுங்கு நடிகர் ராம் போதினேனியை வைத்து படம் இயக்கி வருகிறார் லிங்குசாமி. தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கவிருக்கிறார்.

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்நிலையில் அந்த பட்டியலில் சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார்.

கமல் செய்ததை வெற்றிமாறனுக்காக செய்யும் சூர்யா: பார்த்துங்கண்ணா