சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் ‘அண்ணாத்த‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

‘அண்ணாத்த’ படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. இதனால் உஷாரான படக்குழுவினர் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாகவே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டனர். அதனை தொடர்ந்து அண்மையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. ரஜினியின் அறிமுகப்பாடலான இதனை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடல் வெளியான போது எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார் ரஜினி.

சிவகார்த்திகேயன் இல்லன்னா என்ன? வேற ஹீரோ வச்சு பண்ணுவேன்: பொன்ராம் அதிரடி!இந்நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சாரக்காற்றே’ என துவங்க்கும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. ரஜினி – நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இது படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர்.

‘அண்ணாத்த’ படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா தன்னுடைய பாணியில் குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு படமாக ‘அண்ணாத்த’ படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் அண்மையில் வெளியான அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாயோன் படத்தில் நான் அழகாக இருப்பேன் – நடிகர் சிபி சத்யராஜ்!