தனக்கு திருமணமாகி, 17 வயதில் மகள் இருப்பதாக வெளியான தகவல் பொய் என்கிறார் நடிகர் சல்மான் கான்.

சல்மான் கான்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 55 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரின் தம்பி, தங்கைகளுக்கு எல்லாம் திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தன் தம்பி அர்பாஸ் கான் தொகுத்து வழங்கும் பின்ச் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது.

திருமணம்

பிரபலங்கள் குறித்து ட்விட்டரில் வரும் மோசமான ட்வீட்டுகள் குறித்து தன் நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் கேட்கிறார் அர்பாஸ் கான். இந்நிலையில் சல்மான் கானை பற்றி வந்த ட்வீட் பற்றி அவரிடம் கேட்டார். அந்த ட்வீட்டில் கூறியிருந்ததாவது, எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய் கோழையே? நீங்கள் துபாயில் மனைவி மற்றும் 17 வயது மகளுடன் இருப்பது மொத்த இந்தியாவுக்கும் தெரியும். இன்னும் எத்தனை காலம் எங்களை முட்டாளாக்குவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மும்பை

அந்த ட்வீட் குறித்து அதிர்ச்சி அடைந்தார் சல்மான். பின்னர் அவர் கூறியதாவது, இது சுத்தப் பொய். அவர்கள் யாரை பற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கு போஸ்ட் செய்தார்களோ?. அவருக்கு நான் விளக்கம் அளிப்பேன் என்று நினைக்கிறாரா?. எனக்கு மனைவி இல்லை சகோதரா. நான் 9 வயதில் இருந்து இந்தியாவில் இருக்கும் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் தான் வசிக்கிறேன். நான் எங்கு வசிக்கிறேன் என்பது மொத்த இந்தியாவுக்கும் தெரியும் என்றார்.

போலி

நல்லவர் போன்று நடிக்கும் போலி ஆசாமி தான் சல்மான் கான் என்று ஒருவர் தெரிவித்தார். அதற்கு சல்மான் கூறியதாவது, அந்த நபருக்கு ஏதாவது மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். அவரின் மனைவி என்னை பாராட்டியிருப்பார், இல்லை என்றால் மகள் என் படத்தை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார் என்றார். கெரியரை பொறுத்த வரை டைகர் 3 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சல்மான் கான்.