தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக ‘மஹா‘ உருவாகியுள்ளது. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹன்சிகாவின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

சூர்யா ரசிகர்களே.. சிறப்பான சம்பவம் இருக்கு: பிரபலத்தின் ட்வீட்டால் பரபரப்பு!தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடலின் வரியை ஹன்சிகாவின் படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பேமஸான பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹன்சிகா நடிக்கவுள்ள ‘ரவுடி பேபி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. ஏற்கனவே ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள “105 மினிட்ஸ்” தெலுங்கு படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில்படமாக்கப்பட்டுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு, ஒரே கதாப்பாத்திரம் நடிக்கும் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்த படம் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகில் படம் டீசர்: என்ன கதைகளமாக இருக்கும்! ஒரு அலசல்!