ஹைலைட்ஸ்:

  • தேள் பட டப்பிங்கை அரை நாளில் முடித்த பிரபுதேவா
  • தேள் படத்தில் பிரபுதேவாவுக்கு நடன காட்சி இல்லை

ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் தேள். அந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிரபுதேவா கூறியதாவது,

இயக்குநர் ஹரிகுமார் இயல்பை விட பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்திருக்கிறார். ஹரியும், நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இரண்டு பேரும் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை செய்திருக்கிறோம்.

தற்போது அவர் புது வழியில் செல்கிறார். என் படத்தில் நடன காட்சியை தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை.

இடது கை பழக்கம் உள்ளவனாக நடித்திருக்கிறேன். நான் அப்படி நடித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும். சம்யுக்தா மிகவும் பப்ளியான, அழகான ஹீரோயின். மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். ஈஸ்வரி ராவ் மேடம் தமிழில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர். தேள் படம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

படத்தில் வருவது செட்டா இல்லை நிஜ லொகேஷனா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கலை இயக்கம் செய்திருக்கிறார்கள். இந்த படத்தின் டப்பிங் வேலையை அரை நாளில் முடித்துவிட்டேன். ஒரு தயாரிப்பாளராக ஞானவேல்ராஜா மிக அற்புதமாக செயல்படுகிறார். அவர் உருவாக்கி வெளியிடும் படங்கள் பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றார்.

அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போட ரூ. 1.5 கோடி கேட்ட சமந்தா?