ஹைலைட்ஸ்:

  • ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு
  • ஜூடோ ரத்தினம் வீட்டில் இல்லாத நேரத்தில் நடந்த திருட்டு

எம்.ஜி.ஆர்,. சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என்று மூன்று தலைமுறை நடிகர்களுக்கு ஸ்டண்ட் பயிற்சி அளித்தவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான ஜூடோ ரத்தினம். அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார்.

படங்கள் தவிர்த்து நடிகர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். 92 வயதாகும் ஜூடோ ரத்தினம் குடியாத்தத்தில் வசித்து வருகிறார். திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கடந்த 16ம் தேதி சென்னைக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜூடோ ரத்தினத்தின் வீட்டு கதவு திறந்திருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் குடியாத்தத்தில் இருக்கும் அவரின் மகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

ரத்தினத்தின் மகள் விரைந்து வந்து பார்த்தபோது கதவின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். திருட்டு குறித்து தகவல் கிடைத்ததும் ஜூடோ ரத்தினம் குடியாத்தத்திற்கு வந்தார்.

வீட்டில் இருந்த அரை கிலோ வெள்ளிப் பொருட்கள், 15 விலை உயர்ந்த பட்டுச் சேலைகள், 2 ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போய்விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான தோழி பவானியின் வீடியோவை வெளியிட்ட யாஷிகா