இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. கடந்த 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி மற்றும் இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதினை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அதே போல் இந்த விழாவில் ‘அசுரன்‘ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். இந்த விருது பெறும் விழாவில் ரஜினி, லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் மகன்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டபோது அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

மீண்டும் இணைந்த ‘டெடி’ பட கூட்டணி: ஆர்யா ஜோடியாகும் தனுஷ் பட நடிகை!
அதனை தொடர்ந்து ‘அசுரன்’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய பின்னர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய தனுஷ், “சின்ன வயதிலிருந்து திரையில் பார்த்துப் பிரமித்துக் கைதட்டி விசிலடித்த எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் தேசிய விருது வாங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கலையரசன் நடிக்கும் படத்திற்கு பட பூஜை!