பீஸ்ட் படத்தை அடுத்து தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே

ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் பக்கம் வந்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

தனுஷ்

பீஸ்ட் படத்தை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே என்று கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் பூஜா தான் ஹீரோயினாம். சேகர் கம்முலா, தனுஷ் முதல்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. பூஜா ஹெக்டே தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலம் என்பதால் அவரை ஹீரோயினாக்குகிறார்களாம்.

சாய் பல்லவி

சேகர் கம்முலா தனுஷை வைத்து இயக்கும் படத்தில் சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சேகர் கம்முலா இயக்கிய ஃபிதா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். சேகருக்கு ராசியான நடிகை சாய் பல்லவி என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவியை விட்டுவிட்டு பூஜா ஹெக்டேவை தன் படத்தில் நடிக்க வைக்கிறாராம்.

மாளவிகா மோகனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கி வரும் டி43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட ஹீரோயின் அடுத்ததாக தனுஷ் ஹீரோயினாகப் போகிறார். அது ஏன் விஜய் பட ஹீரோயின்களாக தனுஷ் படத்திற்கு தேர்வாகிறார்கள் என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.