ஹைலைட்ஸ்:

  • ஒரு வழியாக ரிலீஸான மாநாடு
  • மாநாடு காட்சியை லீக் செய்த பிரேம்ஜி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. ஏற்கனவே தீபாவளிக்கு வர வேண்டிய மாநாடு தள்ளிப் போய் இன்று வந்திருக்கிறது.

இந்நிலையில் திட்டமிட்டபடி மாநாடு படம் ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்றிரவு அறிவித்ததை பார்த்த சிம்பு ரசிகர்கள் கவலை அடைந்தனர். நல்ல வேளையாக பிரச்சனை எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸாகிவிட்டது.

கடைசி நேரத்தில் மாநாடு ரிலீஸில் சிக்கல்: திடீர்னு வந்த உதயநிதி, விடிய விடிய நடந்தது என்ன?வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி அதிகாலை காட்சிக்காக காத்திருப்பதாக ட்வீட் செய்ததை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை திட்டினார்கள். கேடிஎம் பிரச்சனையால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தான் அதற்கு காரணம்.
நாங்களே விடிந்தும் விடியாமலும் தியேட்டர் வாசலில் வந்து நின்று ஏமாந்து போயிருக்கோம், சும்மா கடுப்பை கிளப்பாதீங்க பிரேம்ஜி என்றார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் மாநாடு படத்தின் ஓபனிங் காட்சி லீக்காகிவிட்டது என்று கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் பிரேம்ஜி.

அதாவது, புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும். மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும் என்று அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரேம்ஜிக்கு காமெடி பண்றதுக்கு நேரம் கிடைக்கலையா, நாங்களே மாநாடு லேட்டா வந்துடுச்சேனு கடுப்பில் இருக்கோம். யோவ் பிரேம்ஜி, வெளிநாடுகளில் மாநாடு வரலய்யா, அது என்னும் பாருங்க என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.