ஹைலைட்ஸ்:

  • நெட்ஃப்ளிக்ஸில் டாக்டர் புது சாதனை
  • ரசிகர்கள், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்த டாக்டர் படம் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

படத்திற்கு இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. டாக்டர் படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. தீபாவளி பண்டிகைக்கு டாக்டர் படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. மேலும் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியானது.

இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸில் டாக்டர் புது சாதனை படைத்திருக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸின் உலக அளவிலான டாப் 10 பட்டியலில் டாக்டர் இடம்பிடித்திருக்கிறது.

உலக அளவிலான பட்டியலில் கடந்த 2 வாரங்களாக இருந்த ஒரே தமிழ் படம் டாக்டர்.

மேலும் கடந்த 2 வாரங்களில் இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படம் டாக்டர்.

டாக்டர் படம் செய்திருக்கும் சாதனைகளை பார்த்த சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார், அனிருத் மொத்த படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.#DOCTORinNetflixGlobalTOP10

முன்னதாக டாக்டர் படம் தீபாவளி பண்டிகைக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவித்ததும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோபமும், அதிருப்தியும் அடைந்தார்கள். தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை டிவியில் விடலாமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் டாக்டர் படம் நெட்ஃப்ளிக்ஸில் செய்திருக்கும் சாதனைகள் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

எதற்கும் துணிந்தவன் சூர்யாவுக்காக சிவகார்த்திகேயன் செய்த சிறப்பான செயல்