ஹைலைட்ஸ்:

  • லம்போர்கினி Urus Graphite Capsule கார் வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.
  • ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர். ஒரு கார் பிரியர். இந்நிலையில் Lamborghini Urus Graphite Capsule லிமிடெட் எடிஷன் கார் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டது. அந்த காரின் விலை ரூ. 3.16 கோடி மட்டுமே.

ஆசைப்பட்டால் விலையை எல்லாம் பார்க்கக் கூடாது அல்லவா?. அதனால் ரூ. 3.16 கோடி கொடுத்து லம்போர்கினி காரை வாங்கிவிட்டார். அந்த குறிப்பிட்ட மாடல் அண்மையில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் Lamborghini Urus Graphite Capsule காரை வாங்கியிருக்கும் முதல் நபர் ஜூனியர் என்.டி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.

காரை வாங்கினாலும் அதை உடனே ஓட்டிப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஏனென்றால் அவர் தற்போது ரஷ்யாவில் இருக்கிறார்.

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். படப்பிடிப்பு முடிந்து நாடு திரும்பிய பிறகே லம்போர்கினி காரை ஓட்டிப் பார்க்க முடியும். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்தை அக்டோபர் மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆண்டவர் வீட்டில் விசேஷம்: ஒன்று கூடிய குடும்பம், வருத்தத்தில் ஸ்ருதி ஹாசன்