ஹைலைட்ஸ்:

  • ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு
  • சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்த ஜெய்பீம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் பார்த்த அனைவரும் சூர்யாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவமதித்துவிட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இதையடுத்து ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு சூர்யா, ஜோதிகா, அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாமக நிர்வாகி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த ரூ. 5 கோடி விஷயத்தை அன்றே கணித்தார் சூர்யா என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
அதாவது சூர்யா நடித்த 24 படத்திலேயே ரூ. 5 கோடி மேட்டரை கணித்துவிட்டாராம். சூர்யா படத்தில் வரும் விஷயங்கள் நிஜத்தில் நடப்பதால் அன்றே கணித்தார் சூர்யா மீம்ஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சூர்யாவுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் ஆயுதம் ஏந்திய போலீசார் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

நான் கல்யாணம் பண்ணா யுவன் மாதிரி…: ஆசையை சொன்ன சிம்பு