பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலி கானிடம் இருக்கும் சில விலை உயர்ந்த பொருட்களை பார்க்கலாம்.

சாரா அலி கான்

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா. அப்பா சயிஃப், அம்மா அம்ரிதா சிங் வழியில் நடிக்க வந்துவிட்டார். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கேதர்நாத் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக இருக்கும் சாராவிடம் இருக்கும் சில விலை உயர்ந்த பொருட்களை பற்றி பார்ப்போம்.

கைக்கடிகாரம்

Bulgari Serpenti Tubogas கைக்கடிகாரம் வைத்திருக்கிறார் சாரா. அதன் விலை ரூ. 9 லட்சத்து 5 ஆயிரத்து 109 மட்டுமே. சாராவிடம் இருக்கும் ஹோண்டா சிஆர்வி காரின் விலை ரூ. 30 லட்சம். சாராவுக்கு ஹேண்ட் பேக் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் ஏகப்பட்ட ஹேண்ட் பேக்குகள் இருக்கிறது. அவர் வைத்திருக்கும் Dusty Pink Burberry medium tote பேக்கின் விலை ரூ. 74 ஆயிரத்து 644 ஆகும். மேலும் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள Bottega Veneta Milano Uluru ஹேண்ட் பேக்கும் வைத்திருக்கிறார். இது தவிர்த்து ரூ. 2.8 லட்சம் மதிப்புள்ள Louis Vuitton Neverfull Tote பேக்கும் வைத்திருக்கிறார்.

அத்ரங்கி ரே

சாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி நம்பர் ஒன். வருண் தவான் ஹீரோவாக நடித்திருந்த அந்த படம் ஓடவில்லை. ஓடிடியில் வெளியான கூலி நம்பர் ஒன் படத்தை பார்த்தவர்கள் மோசமாக விமர்சித்தனர். அதன் பிறகு ஆனந்த் எல். ராய் இயக்கியிருக்கும் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார் சாரா. அந்த படத்தில் அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விமர்சனம்

சாரா அலி கான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அம்மா இந்து என்பதால் அவர் கோவில்களுக்கு செல்கிறார். ஆனால் அவர் அப்படி கோவிலுக்கு செல்வதை பார்ப்பவர்கள் ஒரு இஸ்லாமிய பெண் இப்படி செய்யலாமா என்று சாராவை விளாசுகிறார்கள். அதே சமயம் சாராவை ஆதரிக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.