தன் பார்ட்னரிடம் 11 குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார் ரைசா வில்சன். அந்த பட்டியலை பார்த்த பலருக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.

ரைசா வில்சன்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் ரைசா வீட்டில் இருக்கிறார். வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் தன் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

காதல்

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரைசா பதில் அளித்தார். அப்பொழுது ஒருவரோ, உங்களுக்கு பிரேக்கப் ஆகியிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ரைசாவோ, 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரேக்கப்பானது. புது உறவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். ரைசாவை பிரிந்த அந்த காதலர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு

உங்கள் பார்ட்னரிடம் எதிர்பார்க்கும் குணாதிசயங்கள் என்னவென்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு ரைசா, புத்திசாலித்தனம், கருணை, அன்பு, ஜாலியானவராக இருக்க வேண்டும், கடின உழைப்பு, பொறுப்பானவராக இருக்க வேண்டும், உண்மையானவராக இருக்க வேண்டும், மெச்சூராக இருக்க வேண்டும் என்று 11 குணாதிசயங்களை தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்களோ, லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுதே ரைசா என்கிறார்கள்.

எளிது இல்லை

ரைசா எதிர்பார்க்கும் குணாதிசயங்களுடன் கூடிய மாப்பிள்ளை கிடைப்பது கொஞ்ச கஷ்டம் தான். அதனால் அவர் 5 ஆண்டுகளாக சிங்கிளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. நல்ல மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ரைசா வில்சனும், நடிகர் ஹரிஷ் கல்யாணும் காதலிப்பதாக பேச்சாக கிடந்தது. ஆனால் அந்த காதல் தகவலில் உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.