ஹைலைட்ஸ்:

  • பிராச்சி மிஸ்ராவுக்கு வளைகாப்பு
  • விரைவில் தந்தையாகப் போகும் மகத்
  • மகத், பிராச்சிக்கு குவியும் வாழ்த்துக்கள்

மகத்தும், மாடலும்- தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி அவர்களின் திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் மகத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகத், பிராச்சி திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் கலந்து கொண்டார்கள். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அந்த புகைப்படங்களில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் குஷியாகினர்.

திருமணம் முடிந்த வேகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பிராச்சி துபாய்க்கு செல்லாமல் மகத்துடனேயே சென்னையில் தங்கியிருந்தார்.

லாக்டவுன் நேரத்தில் மகத்துடன் அதிக நேரம் செலவிட முடிகிறது என்று கூறி சந்தோஷப்பட்டார் பிராச்சி. நண்பன் சிம்புவிடம் ரெசிபி கேட்டு சமையல் எல்லாம் செய்து மனைவியை அசத்தினார் மகத். இப்படி அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக சென்றபோது மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் நடந்தது.

அதாவது பிராச்சி கர்ப்பமாக இருப்பதாக மகத் சமூக வலைதளங்களில் அறிவித்தார். இந்நிலையில் பிராச்சிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் மகத். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி.

அந்த புகைப்படங்களை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பிராச்சிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.

கெரியரை பொறுத்த வரை இவன் தான் உத்தமன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் மகத். அந்த படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்து பாடியை கும்மென்று ஆக்கி வைத்திருக்கிறார்.

தன் குடும்பத்தை பற்றி மட்டும் அல்லாமல் அவ்வப்போது நண்பன் சிம்புவை பற்றியும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவார் மகத். மேலும் சிம்புவின் புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிடுவார். இதனாலேயே சிம்பு ரசிகர்களுக்கு மகத்தை ரொம்ப பிடிக்கும்.

குஷ்புவுக்கு குவியும் வாழ்த்துக்கள்: எதற்காக தெரியுமா?