ஹைலைட்ஸ்:

  • நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த வனிதா
  • வனிதாவை கிண்டல் செய்த நெட்டிசன்

வனிதா விஜயகுமார் தன் பிறந்நதாளை துபாயில் கொண்டாடினார். துபாயில் இருந்து வீடியோ எல்லாம் வெளியிட்டார். வனிதாவின் பிறந்தநாளையொட்டி திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் வனிதா. இந்நிலையில் பீட்டர் பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சமூக வலைதளவாசி ஒருவர் வாழ்த்தினார்.

அதை பார்த்த வனிதா கூறியிருப்பதாவது,

vanitha

அன்பை நினைவூட்டியதற்கு நன்றி. அன்பு நீடிக்கும்போது அது அழகானது. உங்களின் அன்புக்கு மற்றவர் தகுதியில்லாதவர் என்று தெரியும்போது அல்லது சூழல் சரியில்லை என்றால் அங்கிருந்து விலகிச் செல்வது தான் சரியான விஷயம். அது உங்களை போன்றவருக்கு புரியாது என்றார்.

வனிதாவின் கமெண்ட்டை பார்த்த அந்த நபரோ, அவரின் கடந்த கால வாழ்க்கை புகைப்படங்களை வெளியிட்டார். வேலையும், வாழ்க்கையும் இல்லாமல் என் வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்றார்.
அதை பார்த்த ரசிகர்களோ, அக்கா இது போன்ற ஆட்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். ஹேட்டர்களுக்கு பதில் அளிக்காமல் நலம் விரும்பிகளுக்கு பதில் அளிக்கலாம் என்றார்கள்.

லிப் டூ லிப் புகைப்படத்தை வெளியிட்டவருக்கு வனிதா இப்படி வித்தியாசமாக பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

நிச்சயதார்த்தத்தை அடுத்து திருமண வீடியோவை வெளியிட்ட அமலா பால்