சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவானவர் அந்த நடிகர். இந்நிலையில் லீடர் நடிகருக்கு வில்லனாக நடிக்கப் போய் அவர் கெரியர் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. இதையடுத்து நடிகரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.

வில்லனாக நடிக்கவே பல கோடிகளை சம்பளமாக கேட்கிறார் நடிகர். சில படங்களுக்கு ஹீரோவை விட அதிக சம்பளம் கேட்கிறார். அவர் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்களுக்கு தான் பிபி எகிறுகிறதாம்.

வில்லனாக மட்டும் அல்ல குணச்சித்திர கதாபாத்திரம், அப்பா வேடம், கௌரவத் தோற்றம் என்று எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக நடிப்பார் நடிகர். தனக்கு மவுசு அதிகரித்துவிட்டதை உணர்ந்த நடிகர், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கோடிகளில் சம்பளம் கேட்கிறாராம்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு சம்பளம், அப்பா வேடத்திற்கு ஒரு தொகை, குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு ஒரு சம்பளம் என்று லிஸ்ட்டு போட்டு வைத்திருக்கிறாராம். அவரின் இந்த லிஸ்ட்டு தான் கோடம்பாக்கத்தினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.