ஹைலைட்ஸ்:

  • த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் கமல் ஹாசன்?
  • த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் கௌதமி இல்லையாம்
  • விக்ரம் படத்திற்கு முன்பே த்ரிஷ்யம் 2 ரீமேக்?

கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார் கமல் ஹாசன். செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியான உடன் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை.

இதற்கிடையே இரண்டு புதுப்படங்களில் கமிட்டாகிவிட்டார் ஷங்கர். இதையடுத்து தங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் புதுப்படத்தை இயக்கக் கூடாது என்று கூறி லைகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

மெல்லவும் முடியல, விழுங்கவும் முடியல: புது சிக்கலில் கமல்இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் கமல். ஆனால் இந்தியன் 2 படத்தின் தீர்ப்பை பொறுத்து தான் விக்ரம் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தை ஒரே ஷெட்யூலில் எடுக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விக்ரம் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கமல் வேறு ஐடியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விக்ரம் பட வேலையை துவங்குவதற்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 2 பட ரீமேக்கில் நடித்து முடித்துவிடலாம் என்கிற யோசனையில் இருக்கிறாராம் கமல்.

ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க தயாராக இருக்கிறாராம் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பையே விறுவிறுப்பாக நடத்தி முடித்தார் ஜீத்து என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷயம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கடந்த 2015ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தான் பாபநாசம் 2 படத்தை எடுக்கப் போகிறார்களாம். நிஜ வாழ்க்கையில் ஒன்றாக இருந்த கமல் ஹாசனும், கௌதமியும் பிரிந்துவிட்டார்கள். இதனால் பாபநாசம் 2 படத்தில் கௌதமி நடிக்க மாட்டாராம்.

பாபநாசம் 2 குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதனால் அதுவரை காத்திருப்போம். இதற்கிடையே த்ரிஷ்யம் 2 படத்தை வெங்கடேஷ், மீனா உள்ளிட்டோரை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்துவிட்டார் ஜீத்து ஜோசப்.