சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் வெளியான ‘மாநாடு’ படத்தின் டிரெய்லரும் 1கோடி பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளது.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘மாநாடு’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருமா?: என்ன சிவாவே இப்படி சொல்லிட்டாரு!

இந்த டிரெய்லரில் இடம்பெற்ற எஸ்.ஜே. சூர்யா பேசிய “வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு” இணையத்தில் படு வைரலானது. இந்நிலையில் ‘மாநாடு’ டப்பிங்கின் போது சிம்பு இதே டைலாக் பேசி வீடியோ ஒன்று ரெக்கார்ட் செய்துள்ளார். அதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மாநாடு’ படம் தீபாவளி வெளியீடாக ரிலீசாக உள்ளது. ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.