ஹைலைட்ஸ்:

  • வனிதாவுக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக தகவல்
  • திருமண வதந்தி குறித்து வனிதா விளக்கம்
  • சிங்கிளாக இருக்கிறேன் என்கிறார் வனிதா

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் லாக்டவுன் நேரத்தில் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்திலேயே முடிந்துவிட்டது. அதற்கு காரணம் பீட்டர் பாலின் குடிப்பழக்கம்.

வீட்டிற்கு கூட வராமல் மது அருந்திக் கொண்டே இருந்ததால் இனியும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்தார் வனிதா. பீட்டர் பாலை நம்பி ஏமாந்துவிட்டதாகக் கூறி கண்ணீர்விட்டார் வனிதா. மூன்றாவது முறையும் திருமணம் தோல்வி அடைந்தாலும் தன் மகள்களுக்காக தைரியமாக இருக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் வனிதாவுக்கு மீண்டும் திருமணம் நடந்துவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை தான் வனிதா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வனிதா தன் மகள்களுடன் மாலத்தீவுகளுக்கு சென்றது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த பயணத்தில் கூட பைலட் வனிதாவுடன் இருந்தாராம்.

வனிதா, பைலட்டின் திருமணம் கொல்கத்தாவில் நடந்ததாம். வனிதா அக்கா எது நடந்தாலும் வெளிப்படையாக சொல்வாரே, அப்படி இருக்கும்போது இந்த பைலட் விஷயத்தை மட்டும் ஏன் சொல்லவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

தன்னை பற்றி அனைவரும் பேசுவதை பார்த்த வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் சிங்கிளாக, available ஆக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே தான் இருக்கிறேன். வதந்திகளை பரப்ப வேண்டாம் மேலும் அவற்றை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

வனிதாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, அக்கா அவர்களை மன்னித்துவிடுங்கள். உங்களை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள். நாங்கள் உங்களை நம்புகிறோம். தைரியமாக இருங்கள். மற்றவர்களுக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளனர்.

சமூக வலைதளவாசிகளோ,

என்னது available ஆ, நீங்கள் திருந்தவே மாட்டீங்களா?. அப்படி என்றால் மீண்டும் திருமணம் செய்ய தயார் என்று அர்த்தம் போன்று. பாவம் யார் சிக்கப் போகிறாரோ என தெரிவித்துள்ளனர்.

வனிதா தற்போது கோலிவுட்டில் பிசியாகிவிட்டார். அவர் கைவசம் நான்கு படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கழுத்தை நெரிக்கும் கடன்: சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்