வனிதா விஜயகுமாருக்கு நிச்சயம் 4வது திருமணம் நடக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியிருக்கிறார்.

வனிதா

வனிதா விஜயகுமாருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். திருமணம் முடிந்த கையோடு பிரச்சனை ஏற்பட்டது. பீட்டரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் வனிதா தன் கணவரை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

பிரிவு

எலிசபெத் ஹெலன் பிரச்சனையில் பீட்டர் பாலுக்கு பக்கபலமாக இருந்தார் வனிதா. ஆனால் பீட்டர் குடியே கதி என்று இருந்ததை பார்த்த பிறகு மனம் மாறி அவரை விட்டு பிரிந்தார். பீட்டர் பால் தன்னை ஏமாற்றிவிட்டதாக அழுதார் வனிதா. அவரின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டதே என்று ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள்.

4வது திருமணம்

4-

வனிதாவின் ஜாதகப்படி அவருக்கு நிச்சயம் 4வது திருமணம் நடக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் வனிதா. அது முருங்கைக்காய் படத்திற்கான விளம்பரம் தான் என்றாலும் சமூக வலைதளவாசிகள் வனிதாவின் 4வது கணவர் பவர்ஸ்டார் என்று பேசுகிறார்கள்.

விளக்கம்

முன்னதாக வனிதாவுக்கும், வட இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தான் சிங்கிளாகவும், availableஆகவும் இருப்பதாக வனிதா தெரிவித்தார். 3 திருமணம் பிரச்சனையில் முடிந்தும் available என்று சொல்வதா என சமூக வலைதளவாசிகள் வனிதாவை விளாசினார்கள். இந்நிலையில் ஜோதிடரின் கணிப்புக்கு வனிதா என்ன சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக உள்ளனர்.