ஹைலைட்ஸ்:

  • அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் லக்ஷ்மி அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள்

கமல் ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் நடித்த படம் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க. அந்த படம் சோனி லைவில் அக்டோபர் 8ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டு கமல் ஹாசன் கூறியிருப்பதாவது,
என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்.அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் தேதி
@SonyLIV-ல் வெளியாகிறது.என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்’ என்றார்.

ட்ரெய்லரை பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். காதலுக்கு கண் மட்டும் அல்ல வயதும் இல்லை என்பார்கள். ட்ரெய்லரில் சந்திரஹாசனுடன் ஓட்டம் பிடித்திருக்கிறார் அப்பத்தா.

அப்பத்தாவை கண்டுபிடிக்காமல் விட மாட்டோம் என்று குடும்பத்தாரும், அவரையும், காதலரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நண்பர்களும் ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.

அந்த அப்பத்தாவ பார்த்த ரசிகர்களுக்கு லைட்டா ஷாக் ஆகிவிட்டது. காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லக்ஷ்மி அம்மாவாக நடித்த ஷீலா தான் அந்த அப்பத்தா. இந்த வயதிலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரே லக்ஷ்மி அம்மா. அவரை பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

விவாகரத்து செய்தியை கேட்டதில் இருந்தே எனக்கு…: சமந்தா தந்தை உருக்கம்

பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூரின் thumbs up – வைரலாகும் வீடியோ!