நடிகை ஜெனிஃபர் லோபஸ் தன் முன்னாள் காதலரான பென் அஃப்லெக்குடன் மீண்டும் சேர்ந்துவிட்டார்.

ஜெனிஃபர் லோபஸ்

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் முன்னாள் பேஸ்பால் வீரர் அலெக்ஸ் ரோட்ரிகஸை கடந்த 2017ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தார். 2019ம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அலெக்ஸுக்கும், டிவி நடிகை மேடிசன் லெக்ராய்க்கும் இடையே கள்ளித்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அலெக்ஸ், லோபஸ் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.

பிரிவு

தனக்கும், அலெக்ஸ் ரோட்ரிகஸுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மேடிசன் லெக்ராய் விளக்கம் அளித்தார். இந்நிலையில் அலெக்ஸும், ஜெனிஃபர் லோபஸும் கடந்த மாதம் பிரிந்துவிட்டனர். தாங்கள் பிரிந்தது குறித்து அலெக்ஸும், லோபஸும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். பிரிந்துவிட்டாலும் லோபஸுடன் மீண்டும் சேர முயற்சிக்கிறாராம் அலெக்ஸ். இந்நிலையில் தான் லோபஸ் தன் முன்னாள் காதலரான பென் அஃப்லெக்குடன் சேர்ந்துவிட்டார்.

பென் அஃப்லெக்

லோபஸும், பேட்மேன் புகழ் பென் அஃப்லெக்கும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. மான்டனாவில் இருவரும் சேர்ந்து தங்கியிருக்கிறார்கள். பென் அஃப்லெக்குடன் லோபஸ் காரில் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. அஃப்லெக்கும், லோபஸும் மீண்டும் சேர்ந்திருப்பது அலெக்ஸுக்கு பிடிக்கவில்லையாம். லோபஸுடன் சேரத் துடிக்கும் அலெக்ஸ், அவருக்கு போன் செய்து, நீ செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினாராம். லோபஸ், அஃப்லெக் ஜோடியால் கோபத்தில் இருக்கிறாராம் அலெக்ஸ்.

பெனிஃபர்

ஜெனிஃபர் லோபஸும், பென் அஃப்லெக்கும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். கடந்த 2002ம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடந்தது. அப்பொழுது அவர்களை ரசிகர்கள் பெனிஃபர் என்று அழைத்தார்கள். 2003ம் ஆண்டு அவர்களின் திருமணம் நடக்க வேண்டியது. ஆனால் திருமணம் நின்றுவிட்டது. அதன் பிறகு 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.