நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்வலிமை படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் அண்மையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை கொண்டாடி தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து ‘நாங்க வேற மாறி’ என்ற பர்ஸ்ட் சிங்கிளும் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த சாதியினரை சினிமாவை விட்டே துரத்த வேண்டும்: மீரா மிதுன் திமிர் பேச்சு!
இந்தநிலையில், பத்திரிகையாளர் கவிதா எழுதிய எண்ணம்போல் வாழ்கை என்ற பாடல், யுவன் சங்கர்ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் யூ டியூப் பக்கத்தில் வெளியாகிறது. அதுதொடர்பாக சென்னையில் யுவன் சங்கர் ராஜா ஊடகங்களை சந்தித்து பேசினார். அப்போது வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடலைத் தொடர்ந்து அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய U1ரெக்கார்ட்ஸ் தளத்தின் மூலம் புதிய இசையமைப்பாளர்கள் பாடகர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் கவிதை வளம் நிறைந்த தமிழ் பாடல்களுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது மாநாடு, வலிமை திரைப்படம் தொடர்பான பணிகளை தான் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.