ஹைலைட்ஸ்:

  • அன்னையர் தினத்தை வெறுக்கும் அர்ஜுன் கபூர்
  • அம்மா மோனாவை மிஸ் பண்ணும் அர்ஜுன் கபூர்
  • ஸ்ரீதேவியை நினைத்து உருகும் ஜான்வி, குஷி கபூர்

நேற்று முன்தினம் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. திரையுலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என்று பலரும் தங்கள் அம்மாக்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தார்கள்.

தங்கள் அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டார்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்களை அவரின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார்கள். அதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்நிலையில் போனி கபூரின் மூத்த தாரத்து மகனான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அர்ஜுன் கபூர் கூறியிருப்பதாவது,

நேற்று அன்னையர் தினம். அதை வெறுக்கிறேன். நான் நடிகராகி நாளையுடன் 9 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் தற்போதும் நீங்கள் இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன் அம்மா. இந்த புகைப்படத்தில் இருப்பதை போன்று சிரித்துக் கொண்டே என்னை பார்த்துக் கொண்டிருப்பதாக நம்புகிறேன் என்றார்.

அர்ஜுனின் அம்மா மோனா ஷோரி புற்றுநோயுடன் போராடி வந்தார். இதையடுத்து அவர் கடந்த 2012ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இஷாக்ஜாதே படம் மூலம் நடிகரானார் அர்ஜுன் கபூர். அந்த படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது அர்ஜுனுக்கு கிடைத்தது. அர்ஜுனின் முதல் படம் வெளியாகும் முன்பே மோனா இறந்துவிட்டார்.

அர்ஜுனுக்கு மட்டும் அல்ல ஜான்விக்கும் அதே நிலை தான். ஜான்வியின் முதல் படமான தடக் ஷூட்டிங் துவங்கியபோது ஸ்ரீதேவி உயிருடன் இருந்தார். ஆனால் படம் ரிலீஸாவதற்குள் அவர் இறந்துவிட்டார். தன் அம்மா வாழ்க்கையை கெடுத்தவர் என்று ஸ்ரீதேவி மீது கோபத்தில் இருந்தார் அர்ஜுன் கபூர். ஆனால் அவர் இறந்த பிறகு ஜான்வி, குஷியை தன் சொந்த தங்கைகள் போன்று பாசமாக பார்த்துக் கொள்கிறார்.

அர்ஜுன், ஜான்வி, குஷி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளை பார்த்த ரசிகர்களோ, போனி கபூரின் பிள்ளைகள் தாயை நினைத்து வாடும் பரிதாப நிலைமையாகிவிட்டதே என்று தெரிவித்துள்ளனர்.

ஹீரோக்களுக்கு 2 புள்ள இருந்தாலும் இளம் நடிகைகளுடன் டூயட் பாடுகிறார்கள்: நடிகை குமுறல்