ஹைலைட்ஸ்:

  • வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு முன்பே அடுத்த படத்தை தொடங்கும் அஜித்.
  • தல 61 படத்தின் ஷூட்டிங் ஹெச்.வினோத் இயக்கத்தில் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

தல அஜித்தின் வலிமை படம் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அது அஜித்தின் 60வது படமாகும். எச் வினோத் இயக்கத்தில் தற்போது ஹைதராபாத்தில் இறுதி கட்ட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்பதால் அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வலிமை பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் தான் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்று பல்வேறு சாதனைகளையும் அது படைத்தது.

அஜித்தின் அடுத்த படமான தல61 படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். இதன் மூலமாக அவர் மூன்றாவது முறையாக அஜித்துடன் தொடர்ச்சியாக கூட்டணி சேர்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றிய புது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் தல 61 ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தான் தொடங்கும் என கூறப்படுகிறது. அதனால் வலிமை ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.