விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம் உள்ளிட்ட படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் ஒரு மவுனப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது ‘தி ஃபேமிலி மேன்’ இயக்குநர்களான ராஜ் -டிகே இயக்கி வரும் ஒரு வெப் சீரிஸ், மாநகரம் இந்தி ரீமேக்கான ‘மும்பைகார்’ ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதுதவிர ‘காந்தி டாக்கீஸ்‘ என பெயரிடப்பட்டுள்ள ஒரு மவுனப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பது குறித்து சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

அதில், இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அதில் எனக்கு வசனங்களே கிடையாது. அது ஒரு மவுனப்படம். நான் தற்போது முன்பை விட நன்றாக இந்தி பேசுகிறேன். ராஜ் -டிகே இயக்கும் வெப் சீரிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைகார்’ படங்களுக்காக நான் இந்தி சரளமாக பேச கற்று வருகிறேன்.

நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்குப்பதிவு: பல கோடிகள் மோசடி செய்துள்ளதாக புகார்!
ஒரு நடிகரின் வார்த்தையை விட அவரது மவுனமே நிறைய பேசவேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அதுவே உண்மை. உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமே வார்த்தைகளை உணர முடியும். நான் பேசாமல் இருக்கும்போதுதான் என்னுடைய உணர்வுகள் வெளிப்படுகின்றன என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

கிஷோர் பாண்டுரங் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர ராஜ், டிகே இயக்குனர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸில் ஷாகித் கபூரும், ராஷி கண்ணாவுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் ‘அந்தாதூன்’ படஇயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ இந்தி படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.