Memes
oi-Shyamsundar I
சென்னை: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் தோல்வியை நெட்டிசன்கள் பலர் மீம் போட்டு கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகிறது. நேற்று லக்னோ அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 210-7 ரன்கள் எடுத்தது.
அதன்பின் லக்னோ அணி 19.3 ஓவரிலேயே 211-4 ரன்களை எடுத்து வென்றது. சிஎஸ்கே அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. சிஎஸ்கேவின் தோல்வியை வைத்து பலர் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்
அருவி மாதிரி! ஷிவம் துபே மேல தப்பே இல்லை.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமே வேற.. களத்தில் நடந்தது என்ன?

தோனி கம்பீர்
லக்னோ அணியின் ஆலோசகராக இந்த தொடரில் கம்பீர் செயல்பட்டு வருகிறார். நேற்று கம்பீர் – தோனி இருவரும் ஆட்டத்திற்கு பின் சந்தித்துக்கொண்டனர். தோனியை பல முறை கம்பீர் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இருவரும் சந்தித்துக்கொண்டது வியப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து பலர் வகை வகையாக மீம் போட்டு வருகிறார்கள்.

பெங்களூர்
நேற்று சிஎஸ்கே அணியின் தோல்வியை அதிகம் கொண்டாடியது பெங்களூர்தான். ஏனென்றால் பெங்களூர் அணியால் 200 ரன்களை பஞ்சாப் அணிக்கு எதிராக டிபன்ட் செய்ய முடியவில்லை என்று பலர் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியும் 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்ததை பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

சிஎஸ்கே தோல்வி
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த ஒரே அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இதை வைத்து பலரும் கிண்டல் செய்து வருகின்றன. மும்பை, பெங்களூர் அணி இதில் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. இதனால் சிஎஸ்கேவின் இரண்டு தோல்வியை அந்த அணிகள் கொண்டாடுவதாக இவர் மீம் போட்டுள்ளார்.

சிஎஸ்கே தாக்கூர்
சிஎஸ்கே அணியில் தாக்கூர் இல்லை. அவர் ரன் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார். ஹஸல்வுட் போல நல்ல பாஸ்ட் பவுலர் இல்லை. இருக்கிற சாகரும் காயம் காரணமாக ஆடவில்லை. இதனால் நேற்று சிஎஸ்கே அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. இதை வைத்து பலர் மீம் போட்டு வருகிறார்கள்.

என்னப்பா போலாமா
கடைசி விவசாயி படத்தில் வரும் தாத்தா பாத்திரத்தை வைத்து சமீபத்தில் நிறைய மீம்கள் வருகின்றன. அதிலும் அந்த தாத்தா என்னப்பா போவோமா என்று சொல்லும் வசனம் வைரலாகி வருகிறது. நேற்றும் லக்னோ அணியில் லீவிஸ் களத்தில் இருந்த போது அதை வைத்து பலர் மீம்ஸ் போட்டனர். அவர் களத்தில் இருக்கிறார் என்று தெரிந்தது சிஎஸ்கே ரசிகர்கள் என்னப்பா போவோமா என்று ஹாட் ஸ்டாரை க்ளோஸ் செய்ததாக மீம் போட்டு வருகிறார்கள்.

வாழ்க்கை நாடகமா
சிஎஸ்கே அணியின் தோல்வியை நேற்று லக்னோ பேன்ஸ் கொண்டாடுகிறார்களோ இல்லையோ மற்ற அணி ரசிகர்கள் அதிகம் கொண்டாடினார்கள். வாழ்க்கை நாடகமா.. இந்த பொழப்பே போர்க்களமா என்று சிஎஸ்கே அணி வீரர்கள் அழுவது போல மற்ற அணி ரசிகர்கள் பலர் மீம் போட்டு கிண்டல் செய்து உள்ளனர்.
English abstract
Memes for CSK fit loss in opposition to Lucknow in IPL 2022. லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் தோல்வியை நெட்டிசன்கள் பலர் மீம் போட்டு கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
Tale first printed: Friday, April 1, 2022, 15:01 [IST]