நடிகர் யோகிபாபு நடிப்பில் ’மண்டேலா’ என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. சமூக கருத்துகளை நகைச்சுவையுடன் சொன்ன இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்மையில் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்மண்டேலா‘ திரைப்பட குழுவினருக்கும், யோகிபாபுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யோகிபாபு தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. அண்மையில் இவரது மண்டேலா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

ஒரு தனிப்பட்ட மனிதனின் வாக்கு எவ்வாறு ஜனநாயகத்தையே புரட்டிப் போடுகிறது என்பதை கதை களமாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமுதாயத்திற்கு தேவையான கருத்தை நகைச்சுவை கலந்து சொன்ன மண்டேலா திரைப்படம் இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. படத்தில் இடம்பெற்ற யோகி பாபுவின் நடிப்பும், படத்தின் உருவாக்கமும் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது.

நகைச்சுவை நாடகமே உலகம் என வாழ்ந்து மறைந்தவர்: கிரேஸி மோகன் குறித்து கமல்ஹாசன் உருக்கம்!
இந்நிலையில் அண்மையில் இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் படக்குழுவினருக்கும் யோகிபாபுவிற்கு பாராட்டு தெரிவித்த அவர், கூடிய விரைவில் யோகிபாபுவுடன் இணைந்து வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் பாராட்டுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் யோகி பாபு.