தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் விவாகரத்து செய்ய போவதாக ஊடகங்களில் காட்டுத் தீயாக செய்திகள் பரவின. இந்நிலையில் அண்மையில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.

விவகாரத்தை அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து தான் கொஞ்ச காலம் பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார் சமந்தா. ஆனால், விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் சமந்தா.

விவாகரத்திற்கு பிறகு நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதில் பிசியாக உள்ள சமந்தா, அண்மையில் கூட ‘காத்து வாக்குல ரெண்டு காதல்‘ படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியுடன் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

வாரிசு நடிகரை சிறைபிடித்த விடுதி ஊழியர்கள்: பரபரப்பு சம்பவம்!
இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி சென்னையில் துவங்கியுள்ள ‘ஸ்பா’ வை சமந்தா நேரில் வந்து திறந்து வைத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், உன்னுடைய அனைத்து சாதனைகளையும் கொண்டாடுவதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ‘deepskindialogues’ மிகவும் அருமையாக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள் பாப்பா என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த spaவில் Sculpting எனப்படும் சிகிச்சைகளும் ஹாலிவுட் தரத்தில் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா, சின்மயி இருவரும் நெருங்கிய தோழிகள். சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த ‘ மன்மதடு 2‘ படத்தில் சமந்தா கெளரவ தோற்றத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எதற்கும் துணிந்தவன் சூர்யா; ஆதரவு கரம் நீட்டிய சத்யராஜ்