நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் அண்மையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து ‘நாங்க வேற மாறி’ என்ற பர்ஸ்ட் சிங்கிளும் முன்பாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சித்தார்த் பட நடிகை திடீர் திருமணம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!இந்தப்பாடல் யூடிப்பில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில் வெளியானது இந்தப்பாடல். ‘வலிமை’ படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, குக்வித் கோமாளி புகழ், கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.அண்மையில் வெளியான ‘வலிமை’ கிளிம்ப்ஸ் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் புதிய ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ஹியூமா குரோஷியுடன் நிற்கும் புகைப்படம், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் என வேற லெவல் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் நடிகர் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம்!