deepti harmanpreet 1648371116729 1648371126042

நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுடன் கடைசி வரை போராடி தோற்ற இந்திய மகளிர் அணி நோ-பாலினால் இருதயம் உடைய அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.நேற்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது..

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

கடைசி ஓவரில் பெரு நாடகம் அரங்கேறியது. இதில் இந்திய பவுலர் தீப்தி ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார் ஆனால் அது நோ-பால் ஆனது. வெற்றி பெற 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் அபாய வீராங்கனை மிக்னன் டு பிரீஸ் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஹர்மன் பிரீத் கவுரும் கேட்சை அழகாகப் பிடித்தார். இந்திய வீராங்கனைகள் கொண்டாடினர், ஆனால் நடுவர் தென் ஆப்பிரிக்க வீராங்கனையை நிற்க என்றார். அது நோ-பால் என்று ரீப்ளேயில் தெரிந்தது. அது நாட் அவுட் ஆனதால் நோ-பால் என்பதால் 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டில் ஒரு ரன், அடுத்த பந்தில் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா அணி.

நோ-பால் வீடியோ:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். அவர் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது பங்கிற்கு 68 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கணை லாவ்ரா 80 ரன்கள் குவித்து அசத்தினார். மிக்னன் டு ப்ரீஸ் கடைசி வரைசி களத்தில் நின்று 52 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஆட்டத்தில் கடைசி பந்து வரை பரபரப்பு நிலவியது. அப்போதுதான் நோ-பால் நாடகம் அரங்கேறியது. தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இரு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நேர்த்தியாக இரு பந்துகளிலும் நேர்த்தியாக தலா ஒரு ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதனால் வெற்றிக்காக கடைசி வரை போராடிய இந்திய அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதன் மூலம் உலகக்கோப்பையில் அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் இழந்தது. இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.