விஜய்யின் மாஸ்டர் படத்தை முடித்த கையோடு கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனிடையில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால், விக்ரம் படம் வெயிட்டிங்கில் இருந்தது. அதனை தொடர்ந்து தேர்தல் முடித்த கையோடு நடிகர் கமல்ஹாசன் சினிமா பக்கம் பார்வை திருப்பினார். இந்நிலையில் தற்போது விக்ரம் படம் தொடர்பான அதிரடி அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் துவங்க, விக்ரம் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு படத்தில் பணியாற்ற உள்ள மற்ற டெக்னீஷியர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் விக்ரம் திரைப்பட படப்பிடிப்பு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் அண்மையில் ஓடிடியில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம் 2’ படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்றும் வதந்திகள் உலா வந்தன.

பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியிலில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர்!
இந்நிலையில் வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் கலோகேஷ் கனகராஜ். ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளை இயக்க இரட்டைச் சகோதரர்கள் அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான சந்திப்பின் போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன், அன்பறிவ் சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் விரைவில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் தாஸிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.