மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நடிகர் விஜய், தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படப்பிடிப்பு தற்போது ஈசிஆரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது முறையாக ஜோடி சேரும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ்: படப்பிடிப்பு துவக்கம்!
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஷைன் டாம் சாக்கோ விமானம் மூலம் சென்னை வந்தார். அதனை தொடர்ந்து நேரடியாக பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் பீஸ்ட் படம் தொடர்பான புதிய அப்டேட்டை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதன்படி பிரபல இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இவர் தற்போது சாணி காயிதம் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிகர் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகிய மூவரும் இணைந்துள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் செம்ம எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். இதனை தொடர்ந்து இந்த செய்தியை #BeastCastUpdate என்ற ஹேஸ்டாக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.