லயோலா கல்லூரியில் படித்த காலத்தில் தனக்கு பிகில் என்று பட்டப்பெயர் இருந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.

லயோலா

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆன்லைன் மூலம் நடந்தது. அந்த சந்திப்பில் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார். தான் லயோலா கல்லூரியில் படித்த அனுபவம் குறித்து அவர் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, லயோலாவில் படித்த பலரும் திரையுலகில் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பல வேலைகள் செய்கிறார்கள். இது ஒரு ஃபிலிம் இன்ஸ்டிடியூட் போன்று ஆகிவிட்டது என்றார்.

டிகிரி

1992ம் ஆண்டு நான் அட்மிஷனுக்கு வந்தது நினைவில் இருக்கிறது. அப்பாவுடன் வந்திருந்தேன். கல்லூரி முதல்வரோ, பிரபலங்களின் பிள்ளைகள் சீட் வாங்குவார்கள் ஆனால் படிப்பை முடித்தது இல்லையே என்றார். அதற்கு என் அப்பாவோ, என் பையன் கண்டிப்பாக படிப்பான், டிகிரி முடிப்பான் என்றார். நல்ல வேளை நான் படித்து டிகிரி வாங்கிவிட்டேன் என்றார் சூர்யா.

பிகில்

லயோலா கல்லூரி மாணவர்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறோம். ஒரு போன் செய்தால் போதும். நான் கல்லூரியில் படித்தபோது எனக்கு பாடத் தெரியாது. அதனால் விசில் அடித்து தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். எனவே, எனக்கு பிகில் என்று பட்டப்பெயர் வைத்தார்கள் என சூர்யா தெரிவித்தார்.

ஜெய்பீம்

கெரியரை பொறுத்தவரை பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படத்தை இயக்குவது பாண்டிராஜ் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இதற்கிடையே அவர் நடித்து வரும் ஜெய் பீம் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் சூர்யா. கர்ணன் படம் புகழ் ரஜிஷா விஜயன் தான் ஹீரோயின்.