ஹைலைட்ஸ்:

  • அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் முருகதாஸ்
  • அல்லு அர்ஜுன் படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ் தாணு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார். அதன் பிறகு அவர் விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் கதை விவகாரம் தொடர்பாக முருகதாஸ் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப் போகிறார் முருகதாஸ் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. தான் அல்லு அர்ஜுன் படத்தை தயாரிப்பதாக கலைப்புலி எஸ். தாணு அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அந்த படத்தை ஒரு தமிழ் இயக்குநர் இயக்குவார் என்று மறைமுகமாக மேலும் கூறினார்.

allu arjun

எனவே, அல்லு அர்ஜுனை வைத்து தாணு தயாரிக்கும் படத்தை தான் முருகதாஸ் இயக்குகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நம்ப முடியாது. முன்னதாக தெலுங்கு நடிகர் ராம் போதினேனியை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் முருகதாஸ். ஆனால் துப்பாக்கி படத்தில் நடித்த விஜய், இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லையாம். விஜய்க்கு பதில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கிறாராம், அதுவும் இரண்டும் வேடங்களில் நடிக்கிறாராம். முருகதாஸ் இயக்கத்தில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்டது.

அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் தான் கேட்டார்கள். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்மா சும்மாவிடாது வனிதா: ‘அந்த’ வீடியோவை வைரலாக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ரசிகர்கள்