வம்சி பைடிபல்லி விஷயத்தில் விஜய் எடுத்த முடிவு பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை.

விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பீஸ்ட் பட வேலை துவங்கிய கையோடு தளபதி 66 பற்றி பேச்சு கிளம்பியது. தளபதி 66 படத்தை நான் தான் இயக்குகிறேன் என்று தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி பேட்டி அளித்தார். அந்த பேட்டியை பார்த்த தளபதி ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், விஜய் கோபம் அடைந்ததாக கூறப்பட்டது.

கோபம்

தன் கையில் இருக்கும் பட வேலை முடியும் வரை அடுத்த படம் குறித்து அறிவிக்க மாட்டார் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் வம்சி பைடிபல்லி ஊருக்கு முந்தி அறிவிப்பு வெளியிட்டது விஜய்யை கோபம் அடையைச் செய்தது என்றும், அதனால் தளபதி 66 இயக்குநரையே மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

தேசிங் பெரியசாமி

துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி விஜய்யை அண்மையில் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். தம்பி கதை ரொம்ப நல்லா இருக்கு, நாம படம் பண்றோம் என்று விஜய் கூறினாராம். இதையடுத்து தளபதி 66 படத்தை வம்சி பைடிபல்லி அல்ல தேசிங் பெரியசாமி இயக்குகிறார் என்று பேசப்பட்டது.

தளபதி 66

-66

தளபதி 66 படத்தை தேசிங் பெரியசாமி இல்லை மாறாக வம்சி பைடிபல்லி இயக்குவது உறுதியாகிவிட்டது. தளபதி 66 படம் தொடர்பான ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்து போட்டுவிட்டாராம். இதன் மூலம் வம்சியை மாற்றுகிறார் விஜய் என்று வெளியான தகவல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் தளபதி 66 படத்திற்கு விஜய்க்கு ரூ. 120 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பது தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.