ஹைலைட்ஸ்:

  • வட சென்னை குறித்து சுவாரஸ்ய தகவல் சொன்ன வெற்றிமாறன்
  • ராஜன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி
  • விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி

தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் வாத்தியாராக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெற்றிமாறனை பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் வெற்றிமாறன் கூறியதாவது,

வட சென்னை படத்தில் கடைசி நிமிடத்தில் இயக்குநர் அமீரை நடிக்க வைத்தோம். ராஜன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிப்பதாக இருந்தது.

ஷூட்டிங் போக வேண்டிய நேரத்தில் அவருக்கு வேறு கமிட்மென்ட் வந்துவிட்டதால் நடிக்க முடியவில்லை. இதையடுத்து ரவி தேஜாவை கேட்டேன். அவர் புதுச்சேரியில் ஷூட்டிங்கில் இருந்தார். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் அவர் தெலுங்கில் நடித்து வந்த படத்தின் டேட்ஸுடன் ஒத்துப் போகாததால் அமீரை நடிக்க வைக்க முடிவு செய்தோம்.

அமீரை சந்தித்து மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பது உங்களுக்கு எப்படி என்று கேட்டேன். அது யார் படம் என்பதை பொறுத்து இருக்கிறது என்றார். நான் தான் ஒரு படத்தை இயக்கி வருகிறேன், அதில் நடிக்க வேண்டும் என்றேன். உடனே ஓகே சொல்லிவிட்டார். நான் இயக்குநராக இருந்தால் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன். நீங்கள் ஏன் என்னை நடிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டார். நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றேன். முதல் மூன்று நாட்கள் சந்தேகத்துடனேயே நடித்தார். நான் இதற்கு சரிபட்டு வருவேனா என்கிற சந்தேகம் அவருக்கு.

அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அமீரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்பது போன்று ஆகிவிட்டது என்றார்.

வட சென்னையில் தான் வெற்றிமாறனுடன் வேலை செய்ய முடியாமல் போனது என்று தற்போது விடுதலையில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் கதாபாத்திரம் வெயிட்டானதாக இருக்கிறதாம். அதனால் விடுதலையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பயமா இருக்கு, பரிசீலித்துப் பாருங்க முதல்வரேனு சொன்ன நடிகை: நெட்டிசன்ஸ் விளாசல்