ஹைலைட்ஸ்:

  • மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சி குறித்து புது தகவல்
  • மாஸ்டர் ஷெஃப்பை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி
  • செம கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளிக்கு தனி இடம் உண்டு. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பார்த்து சிரிக்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து புது நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது சன் டிவி.

மாஸ்டர் ஷெஃப் இந்தியா என்று அழைக்கப்படும் அந்த சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி ஹெலிகாப்டரில் வந்து கெத்து காட்டும் ப்ரொமோ வீடியோ வெளியானது.

குக் வித் கோமாளியை பதம் பார்க்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த விஜய் சேதுபதிஅந்த வீடியோவை பார்த்தவர்கள் என்ன தான் விஜய் சேதுபதியை வைத்து மாஸ் காட்டினாலும், குக் வித் கோமாளியை அடிச்சுக்க முடியாது என்கிறார்கள். இந்நிலையில் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சி குக் வித் கோமாளி போன்று காமெடியாக இருக்காது என்பது தெரிய வந்திருக்கிறது.

மாஸ்டர் ஷெஃப் ஆஸ்திரேலியா போன்றதாம் இந்த நிகழ்ச்சி. நீங்கள் என்ன தான் புதுசு, புதுசாக விளக்கம் கொடுத்தாலும், விஜய் சேதுபதியை வைத்து மாஸ் காட்டினாலும் குக் வித் கோமாளி பக்கத்தில் கூட வர முடியாது என்று அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

குக் வித் கோமாளியை பங்கம் பண்ணத் தான் மாஸ்டர் ஷெஃப் வருகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜாலியாக பார்த்து சிரிக்க குக் வித் கோமாளியும், திறமைகளை வெளிக் கொண்டு வர மாஸ்டர் ஷெஃப்பும் இருக்கும்.

விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க பலர் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டது பலரையும் வியக்க வைத்துள்ளது. விஜய் சேதுபதி கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். அப்படி என்றால் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சிக்கு எத்தனை கோடி சம்பளம் பேசியிருக்கிறார்களோ என்கிறார்கள் ரசிகர்கள்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூலாக வில்லத்தனம் செய்த பிறகு விஜய் சேதுபதியின் கெரியர் டிராக் மாறி நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.