4 பெண்களை சுற்றி நகரும் வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

வாசுவின் கர்ப்பிணிகள்

ஜி.வி. பிரகாஷை வைத்து பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு டாக்டர் மற்றும் நான்கு கர்ப்பிணி பெண்களை சுற்றி கதை நகருமாம். இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே முன்னணி கேரக்டர்கள் தான் என்கிறார் மணி நாகராஜ்.

வனிதா

நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத் தான் டாக்டராக நடிக்கிறார். மலையாள நடிகை லீனா குமார் அவரின் மனைவியாக நடிக்கிறார். அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் புதுமுகம் க்ரிஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதையே. ஒவ்வொருவரும் அவரவர் போர்ஷனில் ஹீரோயின் தான் என்று மணி நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பிரச்சனை

பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியது தான் இந்த படம். 16 முதல் 52 வயது வரை உள்ள பெண்களை பற்றியது. சேவியர் ப்ரிட்டோ சாரிடம் இந்த கதையை சொன்னபோது அவருக்கு பிடித்துப் போய், மிகவும் ஆதரவாக இருக்கிறார். இன்னும் ஒரு ஷெட்யூல் தான் பாக்கி இருக்கிறது. அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என மணி நாகராஜ் கூறியுள்ளார்.

சென்னை

மருத்துவமனை மற்றும் அந்த கதாபாத்திரங்களின் வீடுகளை தான் காட்டுகிறோம். அதனால் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது என்றார் மணி. வாசுவின் கர்ப்பிணிகள் படத்தை விஜய்யின் மாமா சேவியர் ப்ரிட்டோ தயாரித்து வருகிறார். விஷ்ணு மோகன் இசையமைக்கிறார். வனிதா இப்படி ஒரு படத்தில் நடிப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.