ஹைலைட்ஸ்:

  • தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளிக்கு மாரடைப்பு.
  • மருத்துவர்களின் கண்காணிப்பில் முரளிக்கு தீவிர சிகிச்சை.
  • தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக கடைசியாக மெர்சல் திரைப்படம் வெளியானது.

கொரோனாவும், மாரடைப்பும் தமிழ் திரையுலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ் சினிமாவிற்கே போதாத காலம் என்று சொல்லுமளவிற்கு கொரோனாவிற்கும், மாரடைப்பிற்கும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பலியாகி வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விலங்குகளை வைத்துப் படமெடுத்த பிரபலமான இயக்குநர் ராம.நாராயணன், தான் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களை தன்னுடைய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். அவருக்கு பின் தயாரிப்பு நிறுவனத்தை அவருடைய மகன் முரளி ராமசாமியும், அவருடைய மனைவி ஹேமா ருக்மணியும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய தயாரிப்பில் கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது.

கொரோனா நிவாரணத்திற்கு கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுத்த பிரபல நடிகரின் படக்குழு!
இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு நேற்றைய தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு ஏற்பட்டது லேசான மாரடைப்புதான் என்றும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ராட்சத மனித குரங்கு சூப்பர் ஹீரோ திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. கபி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாரயணன் மற்றும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.