ஹைலைட்ஸ்:

  • விக்ரம் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
  • மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி
  • கமல் ஹாசன் தயாரித்து, நடிக்கும் விக்ரம்

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் ஹீரோவை விட வில்லனான விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் செம கூலாக இருந்தது. அவரின் வில்லத்தனத்தை பார்த்து திட்டுவதை விட்டுவிட்டு விஜய் சேதுபதியை ரசிகர்கள் பாராட்டினார்கள்.

மாஸ்டர் விஜய் சேதுபதியின் படம் என்று விமர்சனம் எழுந்தது. மாஸ்டர் படத்தை அடுத்து கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ். இந்நிலையில் கமலுக்கு வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்கள்.

இந்த தகவலை விஜய் சேதுபதியே உறுதி செய்தார். மேலும் தன்னிடம் டேட்ஸ் இல்லாததால் உடனே ஓகே சொல்லவில்லை என்றும் கூறினார். அதே சமயம், கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட விஜய் சேதுபதி விரும்பவில்லை.

கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் விக்ரம் படத்தில் வில்லத்தனம் செய்யப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.

கமலுக்காக தன் டேட்ஸை அட்ஜஸ்ட் செய்யப் போகிறாராம் விஜய் சேதுபதி. விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதியை மாஸாக்கி, கமலை டம்மி பீஸாக்கிவிடுவாரோ லோகேஷ் என்பது தான் ரசிகர்களின் கவலையே. அதனால் தான் ஆண்டவரே சூதானமாக இருங்கள் என்று ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் முழுக் கதையையும் படித்துப் பார்த்த கமல் சில திருத்தங்களை செய்யுமாறு கூறியிருக்கிறாராம். லோகேஷும் அவர் சொன்ன திருத்தங்களை செய்துள்ளாராம். இதற்கிடையே கமல் கதையை திருத்தச் சொன்னது லோகேஷ் கனகராஜுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

விக்ரம் படத்தில் நடிப்புக்கு பெயர் போன மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் நடிக்கிறார். அவர் கதாபாத்திரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அப்டேட் கொடுக்கும் விஷயத்தில் லோகேஷ் கொஞ்சம் கஞ்சம் தான்.

சத்தமில்லாமல் வேலை செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்வதே லோகேஷின் ஸ்டைல். கமலை அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் பண்ணுவார் லோகேஷ் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

குக் வித் கோமாளியை பதம் பார்க்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த விஜய் சேதுபதி