தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் யோகிபாபு தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் வீரப்பனின் கஜானா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த யோகி பாபு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கூர்கா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி இருந்தார். காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

அதனை தொடர்ந்து யோகிபாபு நடிப்பில் ’மண்டேலா’ படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. சமூக கருத்துகளை நகைச்சுவையுடன் சொன்ன இந்தப்படம் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் இடம்பெற்ற யோகி பாபுவின் நடிப்பும், படத்தின் உருவாக்கமும் அனைவத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்றது.

தெலுங்கில் ரீமேக்காகும் ‘நெற்றிக்கண்’: நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா!
இந்நிலையில் அறிமுக இயக்குனர் யாசின் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் யோகி பாபு. இப்படத்திற்கு பிரபாதீஸ் ஷாம்ஸ் மற்றும் ராட்சஷி பட இயக்குனர் கவுதம் ராஜ் இணைந்து கதை எழுதியுள்ளனர். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், பூஜா, தேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீரப்பன் கஜானா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது.

யோகி பாபு தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும், ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். மேலும், வலிமை, அரண்மனை 3, சைத்தான்கே பச்சா, சதுரங்கவேட்டை 2, டாக்டர், அயலான், காசேதான் கடவுளாடா என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார் யோகி பாபு.