ஹைலைட்ஸ்:

  • யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்
  • ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்த யாஷிகா

யாஷிகா தன் தோழி பாவனி மற்றும் இரண்டு பேருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் காரில் சென்றார். கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது அந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் பாவனி உயிரிழந்தார், யாஷிகா படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா மெல்ல மெல்ல குணமாகி வருகிறார். தான் எழுந்து நடக்க 5 மாதங்கள் ஆகும் என்றார் யாஷிகா. இந்நிலையில் அவர் முதல்முறையாக பொது இடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.
மஞ்சள் நிற உடையில் கையில் ஸ்டிக் வைத்துக் கொண்டு யாஷிகா நடந்து வந்ததை பார்த்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

விரைவில் யார் உதவியும் இன்றி பழையபடி நன்றாக நடக்க பிரார்த்தனை செய்கிறோம் யாஷிகா என்று தெரிவித்துள்ளார். யாஷிகாவின் வீடியோவை பார்த்த நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கி பலியான தன் தோழியை நினைத்து தான் யாஷிகா இன்னும் ஃபீல் செய்கிறார். பாவனி இல்லாமல் வாழும் வாழ்க்கை தண்டனையாக இருக்கிறது என்றார் யாஷிகா. மேலும் அவ்வப்போது பாவனியின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதியை திருமணம் செய்ய விரும்பிய நாக சைதன்யா?