ஹைலைட்ஸ்:

  • ரசிகருக்கு உதவி செய்த ஜூனியர் என்.டி.ஆர்.
  • ரசிகரின் மருத்துவ செலவை ஏற்ற ஜூனியர் என்.டி.ஆர்.

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். எப்பொழுதுமே தன் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். இந்நிலையில் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் எனும் ரசிகர் அண்மையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரமேஷின் வருமானத்தை நம்பி தான் அவரின் குடும்பம் இருக்கிறது. நல்ல வேளையாக ரமேஷ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

முன்னதாக ரமேஷ் மருத்துவமனையில் இருந்தபோது அது குறித்த ஜுனியர் என்.டி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வீடியோ கால் செய்து ரமேஷிடம் பேசினார். மேலும் ரமேஷின் மருத்துவ செலவை அவரே ஏற்றுக் கொண்டார்.

ரமேஷுக்கு ரூ. 2.50 லட்சம் கொடுத்தார் ஜுனியர் என்.டி.ஆர். அது மட்டும் அல்ல ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகர்கள் சிலரும் ரமேஷுக்கு நிதியுதவி செய்தார்கள். ஜூனியர் என்.டி.ஆரின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர். படம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இது துரோகம், பச்ச துரோகம் சிவகார்த்திகேயன் அண்ணா: கொந்தளிக்கும் ரசிகர்கள்