ஹைலைட்ஸ்:

  • கார் விபத்தில் பலியான பவானியின் வீடியோவை வெளியிட்ட யாஷிகா
  • யாஷிகாவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்

ஜூலை மாதம் 24ம் தேதி இரவு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் நடிகை யாஷிகா. கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார்.

உடம்பில் ஏகப்பட்ட தையல்: மருத்துவமனையில் இருந்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோபடுகாயம் அடைந்த யாஷிகாவுக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன் வயிற்றுப்பகுதியில் போடப்பட்டிருக்கும் தையல்களை வீடியோ எடுத்து அண்மையில் வெளியிட்டார் யாஷிகா.
இந்நிலையில் பவானியும், தானும் சந்தோஷமாக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அவர் அவ்வப்போது பவானியின் புகைப்படங்களையும் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு வருகிறார்.

வீடியோவில் பவானி சிரித்த முகமாக இருப்பதை பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர். வீடியோவை பார்க்கும் நமக்கே இப்படி கஷ்டமாக இருந்தால், யாஷிகாவுக்கு எப்படி இருக்கும். வீட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் பவானியின் நினைவாகவே இருக்குமே. யாஷிகா இதில் இருந்து மீண்டு வர கடவுள் தான் அவருக்கு சக்தியை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்கள் கழித்து நேற்று இரவு தான் ட்விட்டர் பக்கம் வந்திருக்கிறார் யாஷிகா. தான் விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்வீட் போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

யாஷிகாவால் இன்னும் 5, 6 மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது, படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும். இது ஒரு புறம் இருந்தாலும் பவானி இறந்து தான் உயிர் வாழ்வது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார் யாஷிகா.