ஹைலைட்ஸ்:

  • யாஷிகாவின் நண்பர் அளித்த வாக்குமூலம்
  • யாஷிகா கைதாக வாய்ப்பு

நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த பவானி, செய்யது, அமீர் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்று பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு கடந்த 24ம் தேதி இரவு காரில் சென்னை திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது யாஷிகா ஓட்டி வந்த கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பவானி பலியானார்.

படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

காரை நான் தான் ஓட்டி வந்தேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார் யாஷிகா. அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் யாஷிகாவின் நண்பர் நந்தகுமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த தகவல் எப்.ஐ.ஆரில் இருக்கிறது.

நந்தகுமார் தன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

யாஷிகா, பவானி, செய்யது, அமீர் ஆகியோர் கடந்த 24ம் தேதி இரவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு காரில் வீடு திரும்பினார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை சூளேரிக்காடு பகுதியில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் உதவியுடன் யாஷிகா, செய்யது, அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

பவானியை பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார்.

கார் விபத்து: மருத்துவமனையில் இருக்கும் யாஷிகா மீது போலீஸ் அதிரடி நடவடிக்கையாஷிகா குடிபோதையில் கார் ஓட்டவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா சாப்பிட்டுவிட்டு கார் ஓட்டியதாகத் தான் அவரின் நண்பர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அதிவேகமாக கார் ஓட்டி உயிர் பலி ஏற்பட காரணமாக இருந்ததற்காக யாஷிகா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.