சமந்தா தன் காதல் கணவரை பிரிந்தது குறித்து அவரின் தந்தை ஜோசப் பிரபு முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

சமந்தா

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். தான் கணவரை பிரிந்ததை அக்டோபர் 2ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் சமந்தா. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சமந்தாவை அடுத்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவும் விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார்.

அப்பா

விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, என் மகளும், மருமகனும் பிரிந்துவிட்டதை அறிந்ததில் இருந்து மைண்ட் பிளாங்காகிவிட்டது. எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று தான் நம்பினோம். ஆனால் ஆகவில்லை. என் மகள் நன்கு யோசித்து இந்த முடிவை எடுத்திருப்பார் என்றார்.

4 ஆண்டுகள்

4-

4வது திருமணநாளை கொண்டாட வேண்டிய நேரத்தில் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டாலும் இது நிரந்தரம் இல்லை என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று சேர்த்து வைக்குமாறு நாகர்ஜுனாவிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நண்பர்கள்

கணவன், மனைவியாக இல்லாவிட்டாலும் இனிமேல் நல்ல நண்பர்களாக இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் முடிவு செய்திருக்கிறார்கள். சமந்தா தங்கள் குடும்பத்தை விட்டு சென்றாலும் என்றும் தங்களுக்கு பிரியமானவராக இருப்பார் என்று நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரூ. 200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சமந்தா என தகவல் வெளியாகியிருக்கிறது.

சமந்தா விவாகரத்து: மாமனார் நாகர்ஜுனாவுக்கு குவியும் பாராட்டு, ஏன் தெரியுமோ?