ஹைலைட்ஸ்:

  • மீண்டும் இன்ஸ்டாவுக்கு வந்த நாக சைதன்யா
  • பங்கராஜு படத்தில் அப்பாவுடன் நடித்திருக்கும் நாக சைதன்யா

நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டு புதுப்படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் சமந்தா.

இந்த ஆண்டு அவர் தாயாகிவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத விதமாக விவாகரத்து குறித்து சமந்தாவும், நாக சைதன்யாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தார்கள்.

விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு நாக சைதன்யா இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. இந்நிலையில் அவர் greenlights புத்தகத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அதை எழுதியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது வாழ்க்கைக்கான காதல் கடிதம். உங்களின் பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ. இது எனக்கு கிரீன் லைட் போன்றது என்றார் நாக சைதன்யா.

அந்த போஸ்ட்டை பார்த்த ரகிர்கள், நாக் சைதன்யாவுக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளை மறுநாள் நாக சைதன்யாவின் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளையொட்டி பங்கராஜு படத்தில் நாக சைதன்யாவின் கதாபாத்திரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸரை வெளியிடுகிறார்கள்.

பங்கராஜு படத்தில் அப்பா நாகர்ஜுனாவுடன் சேர்ந்து நடித்துள்ளார் நாக சைதன்யா.

நேற்றிரவு உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிடுச்சாமே?: சமந்தா மாஜி கணவரை கேட்ட அப்பா