ஹைலைட்ஸ்:

  • விஷால் விவகாரம் குறித்து ஆர்.பி. சௌத்ரி விளக்கம்
  • ஆர்.பி. சௌத்ரி மீது விஷால் போலீசில் புகார்
  • இரும்புத்திரை படத்திற்காக ஆர்.பி. சௌத்ரியிடம் கடன் வாங்கிய விஷால்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தான் தயாரித்து, ஹீரோவாக நடித்த இரும்புத்திரை படத்திற்காக பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியிடம் பணம் வாங்கினார் விஷால். அப்பொழுது உறுதிமொழி பத்திரம், காசோலைகளை ஆர்.பி. சௌத்ரியிடம் கொடுத்திருக்கிறார்.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பிறகு தான் அளித்த பத்திரங்களை ஆர்.பி. சௌத்ரி தரவில்லை என்கிறார் விஷால். சாக்குபோக்கு சொல்லி வந்த சௌத்ரி தற்போது அந்த பத்திரங்கள் எல்லாம் தொலைந்துவிட்டதாக கூறுகிறார். அதனால் தான் அவர் மீது தி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன் என்று விஷால் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

ஜீவா அப்பா ஆர்.பி. சௌத்ரி மீது விஷால் போலீசில் புகார்: பரபரக்கும் கோலிவுட்பெரிய தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி ஏன் இப்படி செய்கிறார் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து சௌத்ரி விளக்கம் அளித்திருக்கிறார்.

பிரபல பத்திரிகையிடம் அவர் கூறியதாவது,

இரும்புத்திரை படத்திற்காக என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் விஷால் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுத பூஜை படம் புகழ் இயக்குநர் சிவகுமார் தான் கவனித்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

அவர் இறந்த பிறகு அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பிக் கொடுத்த போது அதை வாங்கிக் கொண்டதாக எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். ஆனால் காணாமல் போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால் அதை வைத்து எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ என்று விஷால் பயப்படுகிறார்.

நான் ஊரில் இல்லை. சென்னைக்கு வந்ததும் இந்த பிரச்சனையை தீர்ப்பேன் என்றார்.